LOADING...
டிசம்பர் 2025இல் திருப்பதி போக திட்டமிட்டிருக்கீங்களா; முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 2025இல் நடைபெறும் முக்கிய உற்சவங்கள் மற்றும் விழாக்கள்

டிசம்பர் 2025இல் திருப்பதி போக திட்டமிட்டிருக்கீங்களா; முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2025
01:05 pm

செய்தி முன்னோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கு காணலாம். டிசம்பர் மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 1 (திங்கள்) விஷ்ணு கோவில் வருடாந்திர உற்சவம் நடைபெறும். இந்த தினத்தில் பெரிய ஜீயர் மடத்தில் இரவு சாத்துமுறை உற்சவம் நடைபெறும். டிசம்பர் 2 (செவ்வாய்) அன்று ஹத்தி ராம்ஜிமடம் ஜீயர் கைங்கரியத் தொடக்கம், டிசம்பர் 3 (புதன்) அன்று மாருதி கஜலுலா உற்சவம் மற்றும் டிசம்பர் 8 (திங்கள்) அன்று ராப்பத்து உற்சவத் தொடக்கம் நடைபெறும்.

முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர் மாத முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர் 9 (செவ்வாய்) அன்று ஸ்ரீ வராக சுவாமி கோவிலில் ஹத்தி ராம்ஜிமடம் ஜீயர் கைங்கரியத் தொடக்கம், டிசம்பர் 13 (சனி) அன்று பத்ரபாத்மி உற்சவம், டிசம்பர் 15 (திங்கள்) அன்று தனுர் மாத (மார்கழி) கைங்கரியத் தொடக்கம் (மார்கழி பிறப்பையொட்டி), டிசம்பர் 16 (செவ்வாய்) அன்று கூடாரைவல்லி விழா (ஆண்டாள் தாயார் சூடிக்கொடுத்த மாலையை பெருமாளுக்குச் சாத்துதல்) நடைபெறும். மேலும், டிசம்பர் 20 (சனி) அன்று பாஸ்கரப் புஷ்கரணி தீர்த்த உற்சவம், டிசம்பர் 25 (வியாழன்) அன்று புஷ்ப யாக உற்சவம் (ஸ்ரீரங்கநாதர் கோவில், திருப்பதி), டிசம்பர் 26 (வெள்ளி) அன்று வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறக்கப்படும்) மற்றும் டிசம்பர் 27 (சனி) அன்று துவாதசி தீர்த்தவாரி நடைபெறும்.

பக்தர்கள்

பக்தர்களுக்கு அறிவிப்பு 

மார்கழி மாதப் பிறப்பு டிசம்பர் 15ஆம் தேதி வருவதால், அன்று முதல் திருப்பதியில் அதிகாலையில் சுப்ரபாத சேவைக்குப் பதிலாக திருப்பாவை சேவை நடைபெறும். முக்கிய விழாக்கள் மற்றும் உற்சவங்கள் காரணமாக, பக்தர்கள் அதற்கேற்பப் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement