
மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா
செய்தி முன்னோட்டம்
திபெத்திய புத்த மத தலைவரான தலாய்லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி செல்கிறார்.
புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை அவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள இருக்கிறார்.
இதற்காக அவர் ஹிமாச்சல் மாநிலத்தின் தர்மசாலாவில் உள்ள காங்க்ரா விமான நிலையத்திற்கு அவரின் சீடர்களுடன் வந்தார்.
இது தொடர்பாக தலாய்லாமாவின் செயலாளர் சிமி ரிக்சின் கூறுகையில், " கவலைப்பட தேவையில்லை. அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் திரும்பி விடுவார். நாளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படலாம்" என கூறினார்.
முன்னதாக மோசமான உடல்நிலை காரணமாக அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் சிக்கிம் மாநிலத்தில் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ட்விட்டர் அஞ்சல்
திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா டெல்லி செல்கிறார்
#WATCH | Himachal Pradesh: Tibetan spiritual leader Dalai Lama reaches Kangra airport.
— ANI (@ANI) October 8, 2023
Dalai Lama will be visiting Delhi today for a check-up.
Dalai Lama’s Secretary Chimie Rigzin says "There is nothing to worry, he will be back in the next two or three days. Tomorrow, he… pic.twitter.com/W5yZ9o7GFw