NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 
    இந்தியா

    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023 | 05:39 pm 0 நிமிட வாசிப்பு
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    தேனி மாவட்டம் மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனை அப்பகுதி வனத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டு மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அதனை தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒப்படைத்தனர். கடந்த சில வாரத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய இந்த அரிக்கொம்பன் காட்டு யானை இரவங்கலாறு மற்றும் பத்துக்கோடு பகுதிக்குள் புகுந்தது என்று கூறப்படுகிறது.

    உயிருக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் 

    இதனை தொடர்ந்து, சின்னமன்னூர் வனத்துறையினர் ரேடியோ காலர் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டத்தினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதன்படி பத்துக்கோடு பகுதியில் சுற்றித்திரியும் யானை ரேஷன் கடை மற்றும் வீடுகளை உடைத்து அதனுள் வைக்கப்பட்டுள்ள அரிசியினை தின்று வருகிறது என்று தெரியவந்தது. யானையின் இந்த அசாதாரண நடமாட்டத்தால் அங்கு வசிக்கும் பொது மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பயத்தில் வீட்டின் உள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளார்கள். ரேஷன் கடை பணியாளர்களும் பயத்தால் பணிக்கு வருவது இல்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகைய சூழலில் அப்பகுதி மக்கள் அந்த அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தேனி
    கேரளா

    தேனி

    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு

    கேரளா

    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  இந்தியா
    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா
    ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்!  இந்தியா
    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023