LOADING...
CPI, CPI (M)-வை தொடர்ந்து TVKவிற்கு ஆதரவு வழங்கியது விசிக; விரைவில் கடிதம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு
மெஜாரிட்டியை நெருங்கிய TVK

CPI, CPI (M)-வை தொடர்ந்து TVKவிற்கு ஆதரவு வழங்கியது விசிக; விரைவில் கடிதம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2026
04:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நீடிக்கும் இழுபறிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சூழல் எட்டியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணை எட்ட முடியாத நிலையில், 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ள காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்தது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது மெஜாரிட்டிக்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், இன்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக அறிவித்து கடிதம் கொடுத்துள்ளது.

ஆதரவு

மெஜாரிட்டியை நெருங்கிய TVK

அதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. சற்று முன் வெளியான செய்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் TVK க்கு ஆதரவு வழங்குவதாக அதன் கட்சி செய்தி தொடர்பாளர் பாவலர் தந்தி டிவி நிகழ்ச்சியில் அறிவித்தார். எனினும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மூலம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக தற்போது 118 என்ற எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. ஆதரவு கடிதங்கள் கைக்கு கிடைத்ததும், TVK தலைவர் விஜய் இன்று மாலை 6 மணிக்கு தமிழக ஆளுநரை நேரில் சந்திக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement