தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு; இரன்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவிப்பு; தவெக+ பலம் 116 ஆக அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நீடிக்கும் இழுபறிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சூழல் எட்டியுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திடம் (தவெக) தற்போது 107 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணை எட்ட முடியாத நிலையில், 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ள காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு கைகொடுத்தது. ஆனால், இது மெஜாரிட்டிக்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், இன்று (மே 8) இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகளும் விரைவில் ஆதரவை வழங்குவதாக அறிவிக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், விஜய் முதல்வர் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
த.வெ.க அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
— Polimer News (@polimernews) May 8, 2026
#Chennai | #TVKVijay | #CPM | #Tamilnadu pic.twitter.com/csoHJ5SvVb
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
த.வெ.க அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு#TVK | #CPI | #TNElection | #Politics | #PolimerNews pic.twitter.com/fE4eyUrGz4
— Polimer News (@polimernews) May 8, 2026