திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாகன் உள்ளிட்ட இருவரை மிதித்து கொன்ற யானை
செய்தி முன்னோட்டம்
திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று யானை கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு சென்ற பாகன் உதயகுமார் அதற்கு உன்ன பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்.
உடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்துள்ளார்.
பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யானை திடீரென திமிறி உள்ளது.
யானை திடீரென திமிறி, அருகிலிருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோரை தூக்கி போட்டு மிதித்து விட்டது. இந்த சம்பவத்தில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார்.
யானை 2 பேரை மிதித்து கொன்றுவிட்டதை அறிந்ததும் கோவில் வளாகம் உட்பட உள்ளூரில் பரபரப்பு தொற்றியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழப்பு!#SunNews | #Thiruchendur | #Elephant pic.twitter.com/ytFllIl2Ra
— Sun News (@sunnewstamil) November 18, 2024