
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு
செய்தி முன்னோட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகர் கோயில் கடற்கரையில் வழக்கம் போல் பக்தர்கள் இன்று(மார்ச்.,11) புனித நீராடி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது நாழி கிணறு பகுதி அருகேயுள்ள கடற்கரையில் வெடிகுண்டு போன்ற தோற்றம் கொண்ட பொருள் ஒன்று கிடந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் பேரில், கோயில் காவல் நிலைய போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு அங்கு சென்று அப்பொருளை கைப்பற்றினர்.
அது வெடிகுண்டா அல்லது திருவிழாவின் போது வெடிக்கப்பட்ட பொருளா? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி, அது திருவிழாவின் போது வெடிக்கப்பட்ட நாட்டு பட்டாசு என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு
— News7 Tamil (@news7tamil) March 11, 2023
விவரம்: https://t.co/EX46ElOmni#நாட்டுவெடிகுண்டு | #திருச்செந்தூர் | #Bomb | #Thiruchendur | #Seashore | #News7Tamil | #News7TamilUpdates