NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

    கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக கட்டுமானம் செய்யவும் மரங்களை வெட்டவும் அனுமதித்த உத்தரகாண்ட் முன்னாள் வனத்துறை அமைச்சர் ஹரக்சிங் ராவத் மற்றும் முன்னாள் பிரதேச வன அதிகாரி கிஷன் சந்த் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வரும் சிபிஐ 3 மாதங்களுக்குள் அதன் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, "அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் நம்பிக்கையை குப்பைத் தொட்டியில் வீசிய ஒரு வழக்கு இது" என்று கூறியுள்ளது.

    "அவர்கள் சட்டத்தை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர். வணிக நோக்கங்களுக்காக சுற்றுலாவை மேம்படுத்த கட்டிடங்களை கட்டுவதற்கு பெருமளவில் மரங்களை வெட்டி இருக்கின்றனர்" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உச்ச நீதிமன்றம் 

    தேசியப் பூங்காக்களில் சஃபாரிகளை அனுமதிக்கலாமா என்பதை ஆய்வு செய்ய குழு 

    ராவத் மற்றும் சந்த் ஆகியோர் சட்டப்பூர்வ விதிகளை மீறியதில் அவர்களுக்கு இருந்த துணிச்சலைக் கண்டு வியப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    "இந்த வழக்கில், அப்போதைய வனத்துறை அமைச்சர் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதினார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது, மேலும் திரு. கிஷன் சந்த் பொது நம்பிக்கைக் கோட்பாட்டை எப்படி காற்றில் பறக்கவிட்டார் என்பதையும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது." என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆனால், இதை சிபிஐ விசாரித்து வருவதால், நாங்கள் தற்போது எதுவும் கூறவிரும்பவில்லை.

    நாட்டிலுள்ள தேசியப் பூங்காக்களில் சஃபாரிகளை அனுமதிக்கலாமா என்பதை ஆராய்வதற்காக ஒரு குழுவையும் நீதிமன்றம் அமைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா

    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ எக்ஸ்
    இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல் சீனா
    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி விண்வெளி
    இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா  டொயோட்டா

    உச்ச நீதிமன்றம்

    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் மஹுவா மொய்த்ரா
    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை  கனமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025