
தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை இடைநீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா டிஜிபி, தெலுங்கானா மாநில போலீஸ் நோடல் அதிகாரி சஞ்சய் ஜெயின் உள்ளிட்டோர், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை,
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சந்தித்ததற்காக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் முன்னர் பகிரப்பட்ட வீடியோவில், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள், ரேவந்த் ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
பிஆர்எஸ் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவை எதிர்த்து, காமரெட்டி தொகுதியில் ரேவந்த் ரெட்டி போட்டியிட்டார்.
காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இவர் முதல்வராவார் எனக் கூறப்படுகிறது.
embed
ரேவந்த் ரெட்டியை வாழ்த்தும் தெலுங்கானா டிஜிபி
#UPDATE | The Election Commission of India has suspended Anjani Kumar, Director General of Police Telangana for violation of the Model Code of Conduct and relevant conduct rules: Sources The Director General of Police Telangana along with Sanjay Jain, State Police Nodal Officer,... https://t.co/FGltWV2Bxe pic.twitter.com/2m7XpbjBqj— ANI (@ANI) December 3, 2023