Loading...
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்

அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
01:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்ட வரிசையில், தற்போது இத்திட்டத்தின் பெயரும் நீக்கப்பட்டுப் பொதுப் பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பெயர் மாற்றம்

தவெக அரசின் தொடர் பெயர் மாற்ற நடவடிக்கை

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய திமுக அரசின் முக்கிய நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றி வருகிறது.

மகளிர் விடியல் பயணம் திட்டம் மகளிர் பயணம் என்றும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்பது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்றும், நான் முதல்வன் திட்டம் திறன் தமிழ்நாடு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை முந்தைய அரசின் அரசியல் அடையாளங்களை நீக்கும் நோக்கில் இருப்பதாக திமுகவினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தாயுமானவர் திட்டம்

புதிதாகப் பெயர் சூட்டப்படாமல் வெளியானது அறிவிப்பு

இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்குப் பதிலாகப் புதிதாக வேறு எந்தப் பெயரும் சூட்டப்படாமல், "பொது விநியோக திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு 4, 5 ஆம் தேதிகளில் வழங்கப்படும்.

இத்திட்டத்தினை தகுதியானவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரி ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில் இப்படி இருக்கும் நிலையில், அங்கு மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே இத்திட்டத்தின் பெயரிலிருந்து தாயுமானவர் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT