Page Loader
பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்! 
12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை NCB கைப்பற்றியது.

பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்! 

எழுதியவர் Arul Jothe
May 19, 2023
02:29 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) 'ஆபரேஷன் சமுத்திரகுப்த்' திட்டத்தின் மூலமாக, 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை ஏஜென்சி கைப்பற்றியது. இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையில், லஷ்கர்-இ-தய்பா, பாகிஸ்தானின் ISI மற்றும் தாவூத் இப்ராகிமின் உதவியாளருக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தாவூத் இப்ராகிமால் தீட்டப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத சதி எனவும் கூறப்படுகிறது. இது இந்திய கடற்படை மற்றும் NCB அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கையாகும். போதை பொருள் கைப்பற்றபோது, ஒரு பாகிஸ்தானியர், கேரளாவின் கொச்சியில் இருந்து கைது செய்யப்பட்டார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Terrorism

ரூ.12,000 கோடி போதைப்பொருள்

இந்த கடத்தலுக்கு தொடர்புடைய, தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளரான ஹாசி அலி, ஐஎஸ்ஐயால் பாதுகாக்கப்பட்டு வந்தது விசாரணையின் போது வெளிவந்துள்ளது. அதோடு, LET பயங்கரவாதி ஷாஜிதுல்லாவுடன் ஹாசி அலிக்கு தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத செயல்களுக்கு ஷாஜிதுல்லா மூளையாக செயல்பட்டதாக அறிக்கை கூறுகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, ஹாசி அலி, அடிக்கடி LET தளபதிகளை சந்தித்தாக உளவுத்துறை அமைப்புகளின் அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12,000 கோடி போதைப்பொருளுக்கான பணத்தின் பெரும்பகுதி, துபாய் வழியாக ஹவாலா மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது எனவும் கூறப்படுகிறது.