NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    05:27 pm
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது

    சென்னையில் கூடுதல் துணை ஆணையர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த 2 நபர்கள் சிக்கிய நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை ராயபுரம் பகுதியில் வெளி மாவட்டத்தினை சேர்ந்த 2 பேர் போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில், கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் போலீசார் நேற்று(மே.,8) இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. அப்பொழுது ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளார்கள்.

    2/2

    போதைப்பொருளினை வாங்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகிறது 

    அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் எடைகொண்ட உயர்ந்த ரக போதை பொருளான மெத்தபெட்டமின் என்னும் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அந்த விசாரணையில், அந்த இருவரில் ஒருவர் சிவகங்கை மாவட்டத்தினை சேர்ந்த காசிம்(40 என்பதும், மற்றொருவர் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த குமரவேல்(38) என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த உயர்ரக போதை பொருளினை வாங்க வந்த 2 பேரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஜப்பான்
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்
    சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை

    காவல்துறை

    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    காவல்துறை

    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023