Page Loader
பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு
புல்வாமாவில் வசிக்கும் சர்தாஜ் அல்தாப் பட் என்ற பத்திரிகையாளர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.

பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு

எழுதியவர் Sindhuja SM
Mar 14, 2023
11:25 am

செய்தி முன்னோட்டம்

தேசிய புலனாய்வு அமைப்பு(NIA), ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. குல்காம், புல்வாமா, அனந்த்நாக் மற்றும் ஷோபியான் ஆகிய இடங்களில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. NIA குழுக்களுடன் போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களும் இருந்தனர். புல்வாமாவில் வசிக்கும் சர்தாஜ் அல்தாப் பட் என்ற பத்திரிகையாளர் NIAவால் கைது செய்யப்பட்டார். பட், உள்ளூர் செய்தி நிறுவனமான க்ரோயிங் காஷ்மீரில் பணியாற்றுகிறார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக ஹூரியத் தலைவர் காசி யாசிர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சால்வேஷன் இயக்கத்தின் தலைவர் ஜாஃபர் பட் ஆகியோரின் வீடுகளில் கடந்த வாரம் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது.

ட்விட்டர் அஞ்சல்

NIA ரெய்டு ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நடந்து வருகிறது