LOADING...
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை குளிர் நீடிக்கும் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட, குளிர்ந்த மற்றும் மிதமான வானிலையே நிலவும்

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை குளிர் நீடிக்கும் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 10, 2025
06:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என கணித்துள்ளார் Tamilnadu weatherman பிரதீப் ஜான். அவரது கணிப்பின்படி கிறிஸ்துமஸ் பண்டிகை வரையிலும் (அடுத்த இரண்டு வாரங்களுக்கு), தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட, குளிர்ந்த மற்றும் மிதமான வானிலையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (KTCC) ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருக்கும். டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம், பெரிய மழைக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில், இந்த ஆண்டின் முதல் முறையாக, வெப்பநிலை 20 டிகிரிக்கு கீழ் குறைய நல்ல வாய்ப்புள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வானிலை

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் வானிலை

டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளிலும், தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், இந்த மழைப்பொழிவு எதுவும் கவலை அளிக்கும் வகையிலோ அல்லது அதிக அளவிலோ இருக்காது. வேலூர், கரூர், சேலம் போன்ற உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 15-16 டிகிரி வரை குறையலாம். திருவண்ணாமலை திருச்சி மற்றும் மதுரையில் வெப்பநிலை சுமார் 16-17 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளது.

Advertisement