அமெரிக்காவில் தெலங்கானா மாணவி ஸ்ரீஜா ரெட்டி மாயம்: வெளியுறவுத்துறை தலையிட அமைச்சர் கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உயர்கல்வி பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயது மாணவி ஸ்ரீஜா ரெட்டி கொய்யா மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மசாசூசெட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியைத் தீவிரமாகத் தேடி கண்டுபிடிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கத் தூதரகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தெலங்கானா சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
இரவு நடைப்பயிற்சி
சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்
நல்கொண்டா மாவட்டம் கனகல் மண்டலத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதியான கொய்யா யாதகிரி ரெட்டி மற்றும் ரூபா ஆகியோரின் மகளான ஸ்ரீஜா, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.
கடந்த நவம்பர் 2 அன்று கல்லூரி முடிந்து டோர்செஸ்டரில் உள்ள தனது அறைக்குத் திரும்பியவர், இரவு நடைப்பயிற்சி செல்வதாகக் கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் இருப்பிடத்திற்குத் திரும்பவில்லை. அவரது செல்போனும் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
தனது அறையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் அவரது தொலைபேசியின் கடைசி இருப்பிடம் பதிவாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் வேண்டுகோள்
பாஸ்டன் காவல்துறையின் தேடுதல் வேட்டை
ஸ்ரீஜா மாயமானது தொடர்பாக பாஸ்டன் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறது.
கார்சன் பீச் அல்லது ஹார்பர் பாயிண்ட் பகுதிகளில் அவர் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால், அவரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 911 எண்ணில் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாஸ்டனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தலையிட்டு, மாணவியை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்கு பாஸ்டன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வெங்கட் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Deeply concerned over the reported disappearance of Ms. Sreeja Reddy Koya, a student from Nalgonda, Telangana, studying at UMass Boston.
— Komatireddy Venkat Reddy (@KomatireddyKVR) November 5, 2026
I urge @IndiainBoston, @IndianEmbassyUS, @MEAIndia, @DrSJaishankar, @KVSinghMPGonda, @kishanreddybjp, @bostonpolice, @CPVIndia to coordinate… pic.twitter.com/4qIXPKnF9T