பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முக்கிய ஒப்பந்தங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். மொபைல் நெட்வொர்க் ஆராய்ச்சி இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பொது-தனியார் கூட்டு பணிக்குழு ஒன்றை தொடங்கியுள்ளன. இந்த குழு திறந்த வானொலி அணுகல் நெட்வொர்க்குகளின்(RAN) மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்துதலில் கவனம் செலுத்தும். அதாவது, ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை இணையத்துடனும் பிற பயனர்களுடனும் இணைக்கத் தேவையான மொபைல் நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கான புதிய ஆராய்ச்சிகளில் இந்த குழு கவனம் செலுத்தும். இந்தியாவின் பாரத் 6ஜி மற்றும் அமெரிக்காவின் நெக்ஸ்ட் ஜி அலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமையில் இந்த பொது-தனியார் ஆராய்ச்சி குழு இயங்க இருக்கிறது.
தொழில்நுட்பங்கள், தூதரகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு குவாண்டம், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து குவாண்டம் ஒருங்கிணைப்பு பொறிமுறையை நிறுவியுள்ளன. இதனால் இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து நடத்தும் ஆராய்ச்சிகள் எளிமையாகும். சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு(iCET) ஆதரவளிக்கவும், ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்புகளை இணைக்கவும் அமெரிக்க-இந்திய வர்த்தக உரையாடல் தொடங்கப்பட இருக்கிறது. புதிய தூதரகங்கள் அமெரிக்காவில் தற்போது ஐந்து இந்திய தூதரகங்கள் இருக்கிறது. அதுபோக, இன்னும் மூன்று தூதரகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தூதரகம் அமெரிக்காவின் சியாட்டிலில் திறக்கப்படும். மேலும், பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்பட இருக்கிறது.