
கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
போர் ஜெட் இன்ஜின்களுக்கான ஒப்பந்தம்
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) உடன் போர் ஜெட் இன்ஜின்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MOU) கையெழுத்திட்டுள்ளது.
தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா எந்த அளவிற்கு அனுமதிக்கும் என்ற கேள்விகள் இருந்தாலும், GE ஏரோஸ்பேஸ் மற்றும் HAL இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
கிண்ட்ஜன்
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்க திட்டத்தில் இந்தியாவும் இணையும்
H-1B விசா விதிகளில் மாற்றம்
இந்தியர்கள் அமெரிக்காவில் வசிப்பதையும் வேலை செய்வதையும் புதிய விசா விதிகள் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தூதரகங்கள்
அமெரிக்காவில் தற்போது ஐந்து இந்திய தூதரகங்கள் உள்ளன. புதிய தூதரகம் ஒன்று சியாட்டிலில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இராணுவ தளவாடங்கள்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமானது இந்தியாவிற்கு புதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
விண்வெளி ஆய்வுகள்
2025ஆம் ஆண்டுக்குள் மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்க தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியாவும் இணையும் என்று செய்திகள் கூறுகின்றன.