தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை
வரும் நவம்பர் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இது வாரஇறுதி நாளில் வரவுள்ளதால், சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். எனினும், தீபாவளி முடிந்த அன்றே, மீண்டும் ஊர் திரும்ப வேண்டி இருக்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதாலும், தீபாவளிக்கு அடுத்த நாள், திங்கட்கிழமை (நவம்பர் 13) அன்றும் விடுமுறை அளிக்க கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு அலுவலங்கங்களில் பணிபுரிபவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் குடும்பத்துடன் மேலும் ஒரு நாள் செலவழிக்கவே இந்த கோரிக்கை என அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முதல்வர் இந்த கோரிக்கையை ஏற்பாரா?