Page Loader
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

எழுதியவர் Nivetha P
Dec 19, 2023
12:25 pm

செய்தி முன்னோட்டம்

போக்சோ வழக்கில் கைதான விழுப்புரத்தினை சேர்ந்த ஆசிரியருக்கு தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்து விளங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் 380 ஆசிரியர்கள் 2023 ஆண்டு கனவு ஆசிரியர் விருதுக்காக பள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்வாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தேர்வான ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று(டிச.,19) நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

விருது 

விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு

இந்நிலையில், தமிழக அரசு விருதான இந்த கனவு ஆசிரியர் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 10 பேர்கள் கொண்ட பட்டியலில் திருவக்கரை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன் என்பவர் பெயரும் இடம் பிடித்துள்ளது. இந்த மகேஸ்வரன் சமீபத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள ஒரு ஆசிரியர் பெயர் கனவு விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது விருது பெறும் சக ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.