
அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்?
செய்தி முன்னோட்டம்
கொரோனா காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதியளித்தது.
ஆனால், தற்போது அந்த பேரிடர் காலத்தில் இருந்து வெகு காலத்தைக் கடந்த பிறகும் அந்நிறுவனத்தின் பல உழியர்கள் வீட்டியலிருந்தபடியே தான் பணி செய்து வருகின்றனர்.
100% வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதை தங்கள் நிறுவனம் அனுமதிக்காது என கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது டிசிஎஸ்.
தற்போது, ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 12 நாட்களாவது அலுவலகம் வந்து வேலை பார்க்காத ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மெமோ அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
டிசிஎஸ்
குற்றச்சாட்டை மறுத்த டிசிஎஸ்:
தங்கள் மேல் வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.
ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது உண்மை தான். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, எனத் தெரிவித்திருக்கிறது டிசிஎஸ்.
அந்நிறுவனக் கொள்கைகளின்படி ஒரே நேரத்தில் 25% மேல் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை பார்க்க வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், ஒரு திட்டங்களின் தேவைக்கேற்ப ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கேட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது டிசிஎஸ்.
கடந்த இரு ஆண்டுகளில் புதிய ஊழியர்கள் பலரும் நிறுவனத்தில் பணியில் இணைந்திருக்கிறார்கள், அவர்களும் அனுபவம் பெறவேண்டும் என தங்கள் நிறுவனம் விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறது டிசிஎஸ்.