Loading...
தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளை தீர்ப்பு
தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை

தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளை தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 07, 2026
08:23 am

செய்தி முன்னோட்டம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல புலனாய்வு இதழான 'தெஹல்கா'வின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பரில், கோவாவில் நடைபெற்ற தெஹல்கா நிறுவனத்தின் 'திங்பெஸ்ட்' நிகழ்ச்சியின் போது, நட்சத்திர விடுதியின் லிப்டில் வைத்து தருண் தேஜ்பால் தமக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக அந்நிறுவன பெண் ஊழியர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தேஜ்பால், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

வழக்கு

கீழ் நீதிமன்ற உத்தரவு ரத்து

இவ்வழக்கை விசாரித்த கோவா விசாரணை நீதிமன்றம், 2021-ல் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தருண் தேஜ்பாலை விடுவித்தது.

இந்த விடுதலையை எதிர்த்து கோவா அரசு சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் டாக்டர் நீலா கோகலே மற்றும் அமித் ஜம்சந்தேகர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து அவரை குற்றவாளி என அறிவித்தது.

தண்டனை

குற்றச்சாட்டுகள் நிரூபணமும், தண்டனையும்

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 376(2)(f), 376(2)(k) மற்றும் 354A, 354B ஆகியவற்றின் கீழ் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமக்கு 62 வயதாவதாலும், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் கருணை காட்டுமாறு தேஜ்பால் தரப்பில் முறையிடப்பட்டது.

இருப்பினும் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கும் வகையில் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், மேல்முறையீடு மற்றும் நீதிமன்ற நடைமுறைகளுக்காக அவர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT