தஞ்சை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு; பூட்டை உடைத்து புதிய பதிவாளர் பதவியேற்பு
செய்தி முன்னோட்டம்
தஞ்சை பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணை வேந்தர் மற்றும் பொறுப்பு பதிவாளர் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக பதிவாளர் அறைக்கு பூட்டு போடப்பட்டது. இந்த நிலையில் இன்று பதவியேற்க வந்த பதிவாளர், போலீஸ் பாதுகாப்புடன் பூட்டை உடைத்து தானே பதவியேற்றுக்கொண்டார்.
இந்த சம்பவத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சங்கர் மற்றும் பதிவாளர் தியாகராஜன் இடையே கடந்த சில நாட்களாக ஈகோ யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியது.
சனிக்கிழமை அன்று இருவரும் ஒருவரை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை பிறப்பித்தனர்.
இது பல்கலைக்கழகத்தில் குழப்பத்தை உருவாக்கியது. தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் இந்த விவகாரத்தை கவனித்து, பழைய நிலையை மீட்டுக் கொள்ளவும், இரு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
embed
Twitter Post
#BREAKING தஞ்சை தமிழ் பல்கலை.யில் பரபரப்பு..Very Wrong..கல்வியாளர் நெடுஞ்செழியன் சொன்ன பரபர கருத்து#thanjavur #university #ThanthiTV pic.twitter.com/s4B1pAEWAR— Thanthi TV (@ThanthiTV) December 30, 2024
சம்பவம்
இன்று காலை பரபரப்பை கிளப்பிய சம்பவம்
இந்நிலையில், இன்று காலை, பதிவாளர் தியாகராஜன் பதிவாளர் அறைக்குள் பூட்டு போட்டுள்ளார்.
பின்னர், துணைவேந்தர் தரப்பின் பூட்டப்பட்ட வெளிக் கதவுக்கு பின்னர், தியாகராஜன் பூட்டிய உள்ளக் கதவையும் உடைக்க போலீசாரின் பாதுகாப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பழைய பதிவாளர் தியாகராஜன் சாவியை கொடுக்க மறுத்ததால் பூட்டு உடைக்கப்பட்டது.
இந்த பரபரப்பின் மத்தியில், வெற்றிச்செல்வன் புதிய பதிவாளராக பதவியேற்றார்.
துணை வேந்தர் மற்றும் பதிவாளர் தரப்பில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பல்கலைக்கழகத்தில் போலீசார் பாதுகாப்பு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த தியாகராஜன்,"பதிவாளர் நியமனம் தொடர்பான செயல்பாடுகளால் மிகவும் வேதனையடைகிறேன். துணை வேந்தர் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, தமிழ் விரோதிகளின் வழியில் செயல்படுகிறார்," என குற்றம்சாட்டினார்.