Page Loader
"தமிழக ஆளுநருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்": சுப்ரமணியன் சுவாமி
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு

"தமிழக ஆளுநருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்": சுப்ரமணியன் சுவாமி

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசிய, "தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்" என்ற கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைப்பதை விட, தமிழகம் என்று அழைத்தால் தான் சரியாக இருக்கும்." என்று ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்த பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, "தமிழ்நாடு, தமிழை தாய் மொழியாக கொண்ட மக்களுக்கானது மட்டுமல்ல. மரபணு சோதனைகள், இந்தியர்கள் அனைவரும் ஒரே உயிரியல் தோற்றதைக் கொண்டிருப்பதாகத் தான் கூறுகிறது" என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவு: