LOADING...
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?
இன்று 10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகிறது

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
May 10, 2024
08:28 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த வாரத்தில், 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகிறது. சென்னையில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் தேர்வு முடிவுகளை வெளியிடும். அந்த முடிவுகளை, அதை மாணவர்கள் www.tnresults-nic-in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் மாணவர்களுடைய கைபேசி எண்ணுக்கும் நேரடியாகவே தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக வந்து சேரும் என்றும் தேர்வுத்துறை ஆணையர் அறிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் இந்த பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளனர்.

embed

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

#NewsUpdate | இன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகளை அறிய: https://t.co/uREaii4uMh, https://t.co/ybAzg3HkeI #SunNews | #10thExamResults | #10thExam pic.twitter.com/hr9tQoI6VU— Sun News (@sunnewstamil) May 10, 2024

Advertisement