
இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் தகுதியான வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இதனை ஒவ்வொரு மாவட்டம் வாரியாக, அந்தந்த ஆட்சியர்களும், சென்னை மாநகராட்சியில் ஆணையரும் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
card 2
அதிக வாக்காளர்கள் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி
அதன் அடிப்படையில், 3 கோடியே 68 ஆயிரத்து 610 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 8,016 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருந்தனர்.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையின் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 65 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில்,1 லட்சத்து 69 ஆயிரத்து 30 வாக்காளர்களும் இருந்தனர்.
டிச.9-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கான சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.