சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மாற்றியமைப்பு - முதல்வர்
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின் கட்டண முறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவுப்படி, பருவக்காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மையுள்ள மின்பளு கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளின் நிலை கட்டணத்தினை குறைக்க, அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைக்கவும், தேவைப்பட்டால் அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென்று எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்க படாது என்னும் நிலையில், ஓராண்டிற்கு நான்கு முறை இந்த சலுகையினை பயன்பத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
வரும் 25ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ள தொழில் நிறுவனங்கள்
மேலும் அவரது உத்தரவில், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15 சதவிகிதம் மூலதனமாக மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, 12 கிலோ வாட்ஸ்களுக்கும் குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIBல் இருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணைய கருத்துரு பெற்றபிறகு பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சமீபத்தில் மின்சாரநிலை கட்டணம் மாற்றப்பட்டதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழித்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் ஆங்காங்கே எழுந்து வருகிறது. இதனால், வரும் 25ம் தேதி இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழித்துறையினர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.