Page Loader
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்
விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2024
12:17 pm

செய்தி முன்னோட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் மக்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 7) கடவுள் விநாயகருக்கு வழிபாடு செய்து வருகின்றனர். மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகரை வழிபடுவதோடு, பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 35,000க்கும் மேற்பட்ட சிலைகள் வைப்பதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1,519 சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பது வாடிக்கையாகும்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியின் பின்னணி

இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கடவுள் விநாயகரின் பிறந்த தினமாக ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகள் தென்னிந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த நிலையில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களை சுதந்திர போராட்டத்தில் ஒருங்கிணைக்க பாலா கங்காதர திலகரால் மும்பையில் நடத்தப்படஆரம்பித்து, தற்போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க, அரசால் ஆண்டுதோறும் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.