
நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு, தேசியத்தேர்வு முகமை ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மே.,மாதம் 7ம்தேதி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 499 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019ம்ஆண்டு முதல் தற்போதுவரை நடத்தப்பட்ட நீட்தேர்வுக்கு எந்தெந்த மாநிலங்களில் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்னும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நீட் தேர்வினை 5 லட்சத்து 51ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஎஸ்சி.,மாணவர்கள் தான் அதிகளவில் எழுதியுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதனைத்தொடர்ந்து மாநிலப்பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் என்னும் வகையில் மராட்டிய மாநில மாணவர்கள் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதன்பேரில் கடந்த 5ஆண்டுகளாக, அதிகளவு நீட்தேர்விற்கு விண்ணப்பித்த மாநிலமாக இம்மாநிலம் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
நீட்
அதிகம் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் என்னும் வரிசையிலும் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளது.
அடுத்து கர்நாடகா மாநிலத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இம்மாநிலம் 2ம் இடத்தினை பிடித்துள்ளது.
அடுத்ததாக தமிழ்நாடு மாநிலத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து 3ம் இடத்தினை பிடித்துள்ளது.
தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையே திரிபுரா மாநிலத்தில் குறைந்தளவாக வெறும் 1,683 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
மேலும் அதிகம் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் என்னும் வரிசையிலும் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளது.
அதேபோல், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுள் 7 பேர் ராஜஸ்தான், 8 பேர் டெல்லி மற்றும் 6 பேர் தமிழ்நாடு மாணவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.