22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு
செய்தி முன்னோட்டம்
இன்று,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படவேண்டும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, நாளை இரங்கல் திர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறவுள்ளது.
14, 15ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்குவார்.
பின்னர், 16 ,17, 18 ஆகிய மூன்று தினங்களும் சட்டப்பேரவை கூட்டமானது விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 19ஆம் தேதி, நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
20ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையும், தொடர்ந்து 21, 22ஆம் தேதிகளில் இந்த அறிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று பதிலுரை வழங்கப்பட உள்ளது.
அன்றோடு சட்டசபை கூட்டம் நிறைவுறுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | பிப்ரவரி 13,14 ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும் . பிப்ரவரி 15ம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை #SunNews | #TNAssembly | #TNAssembly2024 | #MKStalin | #SpeakerAppavu
— Sun News (@sunnewstamil) February 12, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பிப்ரவரி 20ம் தேதி 2024 -25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
— Sun News (@sunnewstamil) February 12, 2024
21ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும்
22ம் தேதி பதிலுரை வழங்கப்படும்#SunNews | #TNAssembly | #TNAssembly2024 | #MKStalin | #SpeakerAppavu