
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக, தமிழகத்தை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதால்,
அவர்களை உற்சாகமூட்டும் வகையில் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் போனஸ் பெற தகுதியான நிரந்தர தொழிலாளர்கள், குறைந்தபட்சம் ₹8,400 முதல் ₹16,800 வரை பெறுவர்.
மேலும் இதன் மூலம் 2,83,787 தொழிலாளர்கள், ₹402.97 கொடி போனஸ் மற்றும் கருணைத்தொகை பெற இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அடுத்தடுத்த நாட்களில் அரசு அதிகாரிகளுக்கு வெளியாகும் இன்ப அதிர்ச்சி
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/4QU3J5Zl8a
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 26, 2023