
சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(ஏப்ரல்.,12) கரகம், சிலம்பம் போன்ற நாட்டுப்புற கலைஞர்களுடன் சித்திரை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
சித்திரை திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் கோயில் திருவிழாக்களில் பெருமளவில் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த சித்தரை திருவிழா தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டத்தில் ஒன்றானது.
அதன்படி இந்த சித்திரை திருநாள் கொண்டாட்டத்தினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொண்டாடியுள்ளார்.
இந்த விழாவிற்கு அவர் அம்மாநில முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்று கூறப்படுகிறது..
திருவிழா
தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
இதனை தொடர்ந்து அந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள், துறைத்தலைவர்கள், தேசிய விருதாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழர் தம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவைகள் நடைபெற்றது என்பது குரிப்பிவேண்டியவை.
மேலும் இந்த சித்திரை திருவிழாவில் 2023 சிறுதானிய ஆண்டினை போற்றும் வகையில் இந்நிகழ்ச்சியின் முடிவில் விருந்தினர்களுக்கு சிறுதானிய உணவு விருந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.