Page Loader
'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை
'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை

'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை

எழுதியவர் Nivetha P
Feb 19, 2023
10:20 am

செய்தி முன்னோட்டம்

கோவையை சேர்ந்த உறவினரான இளைஞர்கள் இருவர் வித்யாசமான ஓர் தொழிலினை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். அவர்கள் மேற்கொண்ட தொழில் அவர்களை உலகளவில் பல நாடுகளுக்கு எடுத்து சென்றுள்ளது. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் பழனிசாமி மற்றும் மனோஜ் குமார் இணைந்து சாக்லேட் பிராண்டான 'சோக்லெட்'டினை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே பார் சாக்லேட் தயாரிக்கும் முதல் உற்பத்தியாளர்கள் இவர்கள் தான் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். கோகோ பழத்தில் துவங்கி முழு சாக்லேட் தயாரிக்கும் வரையிலான அனைத்தையும் இந்நிறுவனம் கையாளுகிறது. சோக்லேட் மசாலா, கோகோ பவுடர், கோகோ காபி பவுடர்கள், கோகோ சாக்கோ பார்கள், பியூர் டார்க் ட்ரிங்கிங் சாக்லேட் போன்ற பல ஆடம்பர பொருட்களையும் இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கோடிக்கணக்கில் லாபம்

உலக நாடுகளுக்கு ஆண்டுக்கு 24 டன்கள் ஏற்றுமதி

இவர்களது பொருட்களின் தனித்தன்மை என்னவென்றால், முழுக்க முழுக்க இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோகோ பழங்கள் கையால் பறிக்கப்படுகின்றன. சுவை மாறாமல் தனித்துவமாக உற்பத்தி செய்யப்படுகிறது என்று இந்த இளைஞர்கள் கூறுகிறார்கள். மேலும் தங்கள் பிராண்டு வகைகள் அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து, ஐரோப்பா முதலிய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆண்டுதோறும் மேற்கூறிய நாடுகளுக்கு 24 டன் சோக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆரம்பகட்டத்தில் பல சவால்களை சந்தித்த இவர்கள், பலதரப்பட்ட சோதனைகளுக்கு பிறகே இவர்கள் இதனை சாக்லேட் பக்குவத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் தற்போது கோடி கணக்கில் லாபம் ஈட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.