LOADING...
நெல்லை, தேனி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு என்ன நிலவரம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது

நெல்லை, தேனி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு என்ன நிலவரம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 10, 2026
03:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மற்றும் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மழை

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement