தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக வானிலை: நேற்று காலை 5:30 மணியளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில்உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று மாலை வடமேற்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் கடற்கரையை கடந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.