
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
டிசம்பர் 23
தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
டிசம்பர் 24
தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 25 முதல் டிசம்பர் 28 வரை
தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டல்வ்ட்
டிசம்பர் 29
தென் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.