Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Aug 13, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 13 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 14 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 19 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த 7 நாட்களுக்கும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.

எவ்க்க்

சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35- 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.