இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா? கவலையை விடுங்க! விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வினியோகம்; கூட்டுறவுத்துறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2.15 கோடி பயனாளர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது மொத்த பயனாளர்களில் சுமார் 97 சதவீதம் ஆகும். குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்குப் பரிசுத் தொகுப்பை வழங்கியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
நாளை முதல்
நாளை முதல் விடுபட்டவர்களுக்கு வினியோகம்
பல்வேறு காரணங்களால் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, விடுபட்ட பயனாளிகளுக்கு நாளை (ஜனவரி 19) முதல் மீண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. பயனாளர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது பங்கைப் பெற்றுக் கொள்ளலாம்.
பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன உள்ளன?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பின்வருவன வழங்கப்படுகின்றன: பொருட்கள்: 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு. ரொக்கப்பணம்: தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட ரூ.3,000 ரொக்கப்பரிசு. கூடுதல் பொருட்கள்: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்பாடுகள்
அரசின் விரிவான ஏற்பாடுகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 24,924 நியாய விலைக் கடைகள் மூலம் இந்த வினியோகப் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் இதன் மூலம் பயனடைகின்றனர். இதற்காக சுமார் 50,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். இதுவரை ரூ. 6,453.54 கோடி ரொக்கப்பணம் வினியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.