காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை
செய்தி முன்னோட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை இன்று தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த காரணமும் கூறாமல் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து, இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 2020 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்டதாகும்.
அது தவிர, 6 மசோதாக்கள் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டதாகும்.
ஆனால், இந்த மசோதாக்களை ஏற்காத ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த காரணமும் கூறாமல் அவைகளை திருப்பி அனுப்பினார்.
இதை எதிர்த்து இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.
டவ்க்னல்
ஆளுநர் ரவியை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின்
இன்றைய கூட்டத்தின் போது ஆளுநர் ரவியை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின், எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதல் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.
"அவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்... ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம். மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியாது." என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப ஒரு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
எனவே, இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி தான் ஆக வேண்டும்.