தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல்
தேசிய கல்விக் கொள்கையில்(NEP) முன்மொழியப்பட்டுள்ள 5+3+3+4 பள்ளி முறையை ஏற்பதா அல்லது ஏற்கனவே உள்ள 10+2 அமைப்பைத் தொடரவா என்பதை தமிழக அரசு இன்னும் முடிவு செய்யாததால், மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவை உருவாக்க அமைக்கப்பட்ட குழு, குழந்தைப் பருவக் கல்விக்கான வரைவுக் கொள்கையை வகுப்பதில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பிற மாநிலங்களில் உள்ள மாநில கல்விக் கொள்கை(SEP) குழு பல்வேறு தலைப்புகளின் கீழ் துணைக் குழுக்களை உருவாக்கியுள்ளன. சில உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளைத் தொகுத்து, குழந்தை பருவக் கல்வி பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றன.
குழந்தை பருவ கல்வியில் என்ன தவறு உள்ளது
"குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், புதிய கல்வி கொள்கை குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். 10+2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பைப் போலவே, மத்திய அரசின் 5+3+3+4 கொள்கைக்கு கீழ் படித்த மாணவர்கள் மட்டும் அரசு வேலைகளில் சேரத் தகுதியுடையவர்கள் என்ற நிலை வரலாம். எனவே, இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும்." என்று குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். "தமிழக அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை(ICDS) மையங்கள், ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சிக்கு சரியான அணுகுமுறையாக இருந்தாலும், NEPஇல் முன்மொழியப்பட்ட குழந்தை பருவ கல்வியில் என்ன தவறு உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த உறுப்பினர் மேலும் கூறினார்.