பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை
செய்தி முன்னோட்டம்
2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படி இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்குத் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் டிசம்பர் 9ஆம் தேதியும், 10ஆம் வகுப்புத் தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளன.
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பின்வருமாறு:-
10.12.2024 - செவ்வாய் - தமிழ்
11.12.2024 - புதன் - விருப்ப மொழி பாடம்
12.12.2024 - வியாழன் - ஆங்கிலம்
16.12.2024 - திங்கள் - கணிதம்
19.12.2024 - வியாழன் - அறிவியல்
23.12.2024 - திங்கள் - சமூக அறிவியல்
12ஆம் வகுப்பு
12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
09.12.2024 - திங்கள் - தமிழ்
10.12.2024 - செவ்வாய் - ஆங்கிலம்
12.12.2024 - வியாழன் - கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
14.12.2024 - சனி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
17.12.2024 - செவ்வாய் - கணிதம், விலங்கியல், வணிகம், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு
20.12.2024 - வெள்ளி - வேதியியல், கணக்கியல், புவியியல்
23.12.2024 - திங்கள் - இயற்பியல், பொருளாதாரம்
அனைத்து தேர்வுகளும் தேர்வுகள் காலை 9:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடத்தப்படும். அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24இல் தொடங்கும்.
ட்விட்டர் அஞ்சல்
12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது#malaimurasu #ɴᴇᴡsᴜᴘᴅᴀᴛᴇs #BreakingNews #12thpublicexam #tamilnadu pic.twitter.com/jZiAuy4SrL
— Malaimurasu TV (@MalaimurasuTv) November 22, 2024
ட்விட்டர் அஞ்சல்
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
10-ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!https://t.co/WciCN2SQmv | #exams | #HalfYearlyExamTimetable | #Tamilnadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/c5iNdxvjHC
— News7 Tamil (@news7tamil) November 22, 2024