வண்டலூர் உயிரியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளநிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இதன் மொத்தப்பணிகளும் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பூங்காவில் உள்ள அனைத்து உயிரினங்களின் காப்பகங்களும் நவீனமயமாக்கப்படுவதோடு, அருகாட்சியகம், பூங்காத்தியேட்டர் உள்ளிட்டவைகள் அமைக்க தமிழக அரசு ரூ.4.3கோடி நிதியினை ஒதுக்கியுள்ளது. இங்கு அமைக்கப்படவுள்ள இந்த 3டி, 7டிதியேட்டர்களில் பல்லுயிர் குறித்த ஆவணப்படங்கள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது. லண்டன் நாட்டிலுள்ள அருங்காட்சியகம் போல், மிருகக்காட்சி சாலையினை நவீனத்தரத்தோடு வண்டலூர் பூங்காவினை மேம்படுத்த வனத்துறை முயற்சி எடுத்துவருகிறது என்று தெரிகிறது. மேலும், விலங்குகளோடு உரையாடும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்பம் கொண்ட அரங்கத்தினை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பூங்கா மேம்படுத்தப்படுவதால் பல்லுயிர் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வினை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.