தமிழ்நாடு அரசுடன் மோதல் - 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்
தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலளிக்கவில்லை. எனினும், தமிழக அரசு அதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக இன்று(ஜூன்.,23)காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசுவதோடு, சட்ட-வல்லுநர்களோடு தமிழ்நாடு அரசின் நிலை குறித்து ஆலோசிக்கவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. செந்தில் பாலாஜி வழக்கில் முகாந்திரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியதாக ஆளுநர் கருதுகிறார் என்று கூறப்படுகிறது.