
ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனைத்து தொடக்க வேளாண்மை சங்கங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
இதன்படி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் உள்ள சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி மற்றும் கடன் திட்டங்கள் குறித்த கையேட்டை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க வேண்டும்.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கினால், ஒரு கணக்கிற்கு ரூ.5 வீதம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்களின் சராசரி வயது 50க்கும் மேல் உள்ள நிலையில், இளைஞர்களை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள்
#BREAKING | ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம்#SunNews | #TNGovt | #RationShop | #Bankingservices pic.twitter.com/40bhcRRfnP
— Sun News (@sunnewstamil) October 24, 2024