LOADING...
தமிழக தேர்தல் களம்: விஜய், ஸ்டாலின், எடப்பாடி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்
விஜய், ஸ்டாலின், எடப்பாடி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்

தமிழக தேர்தல் களம்: விஜய், ஸ்டாலின், எடப்பாடி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2026
11:54 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு தரவுகள் வெளியாகியுள்ளன. மேலோட்டமாக பார்க்கையில் 85.11% ன்ற எண் ஒரு மாபெரும் சாதனையாக தெரிந்தாலும், கடந்த 25 ஆண்டுகால தேர்தல் வரலாற்றோடு ஒப்பிடும்போது இது ஒரு கவலைக்குரிய 'தேக்கநிலையை' உணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றமோ அல்லது அலையோ வீசினால், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 60-70 லட்சம் வரை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 25 லட்சம் உயர்வு என்பது கடந்த 5 ஆண்டுகளில் இணைந்த புதிய இளம் வாக்காளர்களின் இயல்பான எண்ணிக்கையே தவிர, எழுச்சியால் வந்ததல்ல என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

தொகுதி நிலவரம்

நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம்

தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரங்கள் இதோ: மு.க. ஸ்டாலின்- கொளத்தூர் தொகுதி- 86% (1,82,375) கடந்த முறையை விட 9,000 அதிகரிப்பு எடப்பாடி பழனிசாமி- எடப்பாடி தொகுதி - 92% (2,54,364) கடந்த முறையை விட 7,000 அதிகரிப்பு விஜய்- பெரம்பூர் தொகுதி- 89% (2,02,944) கடந்த முறையை விட 2,500 அதிகரிப்பு விஜய்- திருச்சி கிழக்கு தொகுதி- 82% (1,80,066) கடந்த முறையை விட 4,000 அதிகரிப்பு சீமான்- காரைக்குடி தொகுதி- 74%- (2,26,506)

சாதனை

85% சாதனையின் பின்னால் உள்ள 'புள்ளிவிவரத் திருத்தம்'

இந்தத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு எட்டப்பட்டதற்கு முதன்மையான காரணம் வாக்காளர்கள் அதிகரித்தது அல்ல, மாறாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதுதான். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (SIR) மூலம் சுமார் 70 லட்சம் போலி மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.4 கோடியிலிருந்து 5.7 கோடியாகக் குறைந்தது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததால், சதவீதக் கணக்கில் இது சாதனையாகத் தெரிகிறது.

Advertisement

சாதக அலை

இது யாருக்கு சாதகம், யாருக்குப் பாதிப்பு?

திவான வாக்குகள் பெரிய அளவில் அதிகரிக்காதது, ஆட்சிக்கு எதிரான அலை தீவிரமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. இது ஆளும் தரப்பிற்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம். ஒரு புதிய கட்சி சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென்றால், 'மௌன வாக்காளர்கள்' திரண்டு வந்து ஓட்டளித்திருக்க வேண்டும். ஆனால், தரவுகளின்படி அத்தகைய பெரிய அளவிலான கூடுதல் வாக்குப்பதிவு நடக்கவில்லை என்பது தவெக போன்ற கட்சிகளுக்குச் சவாலாக அமையலாம். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் துடித்திருந்தால், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியிருக்கும். 4.87 கோடி என்பது மக்கள் தற்போதைய நிலையையே விரும்புவதைச் சூசகமாக உணர்த்துகிறது என அரசிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Advertisement