இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமாரி மாவட்டத்தினை சேர்ந்தவர் திரு.டிஜிபி.சைலேந்திர பாபு.
இவர் எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பல பட்டபடிப்புகளை படித்துள்ளநிலையில், சைபர் கிரைம் ஆய்வுக்குறித்த படிப்பினையும் படித்துள்ளார்.
1987ம்ஆண்டு தமிழக காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்டக்குழுவின் ஐஜி-யாக இவர் பணியாற்றியுள்ளார்.
பின்னர், 2004ம்ஆண்டு வடசென்னை இணை ஆணையராக பொறுப்பேற்ற இவர் மாமூல் வாங்கும் ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோருக்கான தீர்வினை கொண்டுவந்தார்.
தற்போது சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் அந்தளவுக்கு இல்லை என்பதற்கு சைலேந்திரபாபு அவர்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள்தான் காரணம் என்று தமிழக காவல்துறையே கூறியுள்ளது.
2010ம்ஆண்டு கோவையில் காவல்துறை ஆணையராக இவர் பொறுப்பேற்றபொழுது, பள்ளி மாணவர்களை கடத்திச்சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மோகனகிருஷ்ணன் என்கவுண்டர்மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாதனை
சிறைவாசிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சிக்கான நடவடிக்கையினை மேற்கொண்ட டிஜிபி
பின்னர் 2015ம்ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் கடலோரப்பாதுகாப்பு நீச்சல் குழுமத்துடன் களமிறங்கிய சைலேந்திரபாபு நீந்திச்சென்று வீட்டிற்குள் சிக்கிய மக்களைமீட்டு அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார்.
அதன்பின்னர் இவர் சிறைத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டநிலையில், தண்டனையினை அனுபவித்து வெளியேவரும் கைதிகளுக்கு வாழ்வாதாரத்தினை உறுதிச்செய்ய சிறைவாசிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சியளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவ்வாறு பல நலத்திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இவர் 2021ம் ஆண்டு தமிழக டிஜிபி'யாக பொறுப்பேற்றார்.
பல்வேறு ஆபரேஷன்களை மேற்கொண்டு குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள சைலேந்திர பாபு அவ்வப்போது மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதையும் தனது வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று(ஜூன்.,30)ஓய்வுப்பெறும் நிலையில், புது டிஜிபி'யாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.