கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலத்தில் கடந்த 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி தீண்டாமை கொடுமைக்கு எதிராக மற்றும் சமூக நீதியினை வலியுறுத்தி வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா இன்று(ஏப்ரல்.,1) கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் கேரள அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலினுடன் இணைந்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் ஸ்டாலின், இந்தியாவுக்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம். நானும் பினராயி விஜயனும் உடலால் வேறுபட்டாலும் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்கள் நடத்த தூண்டுகோலாக இருந்ததே இப்போராட்டம் தான் என்று உரையாற்றியுள்ளார்.