முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: 8 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, வடகிழக்குப் பருவமழை பாதிப்பு சீரமைப்புப் பணிகள் மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூட்டத்தில் விவாதிக்கப்பட விவரங்களை பற்றி விளக்கமளித்தார்.
விவரங்கள்
அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்
தமிழகத்தில் புதிதாக 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறைவு செய்த பிறகு, தமிழகத்தில் சமூக நீதிக் கணக்காய்வு நடத்தப்பட்டு சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்.
மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் விஜய், பொதுமக்கள் மற்றும் மாநிலத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அதற்கேற்பத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறித்தியதாக செய்திகள் கூறுகிறது.
அதோடு, சாலை வசதி, குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை சிக்கல்களுக்கு முன்னுரிமை அளித்துத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.