உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில். இங்கு சித்திரை திருவிழாவானது வரும் 18ம் தேதி துவங்கி நடைபெறும். அதன்படி அடுத்த மாதம் 2ம் தேதி கூத்தாண்டவருக்கு தாலி கட்டும் நிகழ்வு செய்யப்படும். அதற்கு மறுநாள் அந்த கோயிலின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து இந்த திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவண்குமார் ஜடாவத் நேற்று(ஏப்ரல்.,11) சென்றுள்ளார். அப்போது அவர் கோயில் உள்ளே சென்று வழிபட முற்பட்டுள்ளார். அப்போது தனது காலணியினை கழட்டி, தனது உதவியாளரை எடுத்து செல்லுமாறு கூறினார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை
ஆட்சியர் சொன்னதை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச்சென்றார், இந்த சம்பவம் ஆய்வுக்காக அங்கு காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் சரவண்குமார் ஜடாவத் கோவை மாநகராட்சியின் ஆணையராக இருந்தார். கனியாமூர் ஸ்ரீ மதி உயிரிழப்பு கலவரத்தின் போது தான் அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்தார்என்பது குறிப்பிடவேண்டியவை. இதற்கிடையே தனது காலணியினை தனது உதவியாளரை எடுக்க சொன்ன இந்த சரவண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துளார்கள்.