முதல்வர் விஜய்யின் அறை இடமாற்ற விவகாரம்: திமுக - தவெக எம்.எல்.ஏக்கள் இடையே காரசார மோதல்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலக அறை இடமாற்றம் மற்றும் டெண்டர் விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் பேசிய திமுக MLA எ.வ.வேலு,"முதல்வர் விஜய்யின் புதிய அறை கட்டுமான பணிகள் நிறைவடைந்த பிறகே ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் முதலமைச்சரின் அறையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பினார். திமுகவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் டெண்டர் நடைமுறைகள் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
புதிய அலுவலகம் கட்டுவது ஏன்? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்
— India Today Tamil (@indiatodaytamil) August 18, 2026
கருணாநிதி, ஜெயலலிதாவும் புதிய தலைமைச் செயலகத்தின் அவசியத்தை உணர்ந்தனர். முதல்வர் மற்றும் அதிகாரிகளின் பணிச்சுமைக்கு ஏற்ற வசதிகள் தேவை என்பதற்காகவே தற்காலிகமாக அலுவலகம் மாற்றப்படுகிறது; இது ஆடம்பரத்திற்காக அல்ல என ஆதவ் அர்ஜுனா… pic.twitter.com/xIHs7Ijkcn
காரணம்
அறை இடமாற்றத்திற்கான காரணம்
முதலமைச்சர் விஜய் தனது சொந்த வசதிக்காக அறையை மாற்றவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், அவரைச் சுற்றி பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கு போதிய இடவசதி இல்லாததே இதன் காரணம் என்றார்.
"முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் 100 சதுர அடிக்கும் குறைவான சிறிய இடத்தில் பணிபுரிகின்றனர்; முறையான கழிப்பறை வசதிகள்கூட அங்கு இல்லை".
காலையில் இருந்து மாலை வரை வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் அரசு அதிகாரிகளையும் முதல்வர் தொடர்ந்து சந்திக்க வேண்டியுள்ளதால், இந்தத் தற்காலிக இடமாற்றம் செய்யப்படுகிறது என்றார்.
கடந்த ஆட்சியை விட 20% முதல் 36% வரை குறைந்த மதிப்பில் வெளிப்படையாக டெண்டர்கள் விடப்பட்டு வருவதாகவும், விரைவில் நெடுஞ்சாலைத்துறை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.