Loading...
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: தேர்வு மற்றும் முடிவுகள் தேதி முழு விவரம்
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: தேர்வு மற்றும் முடிவுகள் தேதி முழு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
01:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் தேர்வு அட்டவணையை வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு): பிராக்டிகல் தேர்வுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கிப் பிப்ரவரி 18 வரை நடைபெறும். பிரதான எழுத்துத் தேர்வுகள் மார்ச் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. தேர்வு முடிவுகள்: 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் உத்தேசமாக மே 7-ஆம் தேதி வெளியிடப்படும்.

10-ஆம் வகுப்பு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிராக்டிகல் தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வுகள் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ளன.

17.03.2027- தமிழ் (மற்றும் முதல் தாள் பாடங்கள்)

25.03.2027- ஆங்கிலம்

31.03.2027- கணிதம்

05.04.2027- அறிவியல்

09.04.2027- சமூக அறிவியல்

10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் உத்தேசமாக மே 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT